ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடியில் விடிய விடிய போராட்டம்!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் தாமிர உற்பத்தி ஆலையினால் நிலத்தடி நீர் பாதிப்பு மக்களுக்கு கேன்சர் நோய் தாக்குவது போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் விவசாயிகள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும், மக்களின் சுகாதார நலனுக்கு எதிரான ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். நள்ளிரவில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.