ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான ரவிச்சந்திரனுக்கு 15 நாட்கள் விடுப்பு.!
- முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ரவிச்சந்திரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
- தற்போது உயர்நீதிமன்ற மதுரை கிளை வருகின்ற 10-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை ரவிச்சந்திரனுக்கு சாதாரண விடுப்பு வழங்கி உத்தரவிட்டு உள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ரவிச்சந்திரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் ரவிச்சந்திரனுக்கு பரோல் கேட்டு அவரது தாய் ராஜேஸ்வரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் ஒன்றை செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை ரவிச்சந்திரனுக்கு 5 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது.
அதன் படி வருகின்ற 10-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை ரவிச்சந்திரனுக்கு சாதாரண விடுப்பு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.