விமானங்களில் அனுமதி மறுத்தால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் !
விமானப் போக்குவரத்துத்துறை இயக்குநரகம் டிக்கெட் உறுதி செய்யப்பட்ட பயணிகளை விமானத்தில் ஏற்ற அனுமதி மறுத்தால் அதற்கான இழப்பீட்டுத் தொகையை விமான நிறுவனங்கள் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
2015-ம் ஆண்டு, அதிக புக்கிங் இருந்ததன் காரணமாக மோங்யா என்ற பயணியை விமானத்தில் ஏற்ற மறுத்த ஏர்இந்தியா விமான நிறுவனம், விமானப் போக்குவரத்துத்துறையின் விதிகளை சுட்டிக்காட்டி விளக்கமளித்தது. இதுகுறித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. அதிக புக்கிங்குகளின் காரணமாக சில விமான நிறுவனங்கள் பயணிகளை போர்டிங்குக்கு அனுமதிப்பதில்லை என குறிப்பிட்டுள்ளதே தவிர அது சரி என விமானப் போக்குவரத்து விதியில் விளக்கமளிக்கப்படவில்லை என உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. மேலும், அத்தகைய சேவைக் குறைபாடு ஏற்படும் தருணங்களில் உரிய இழப்பீட்டை பாதிக்கப்பட்ட பயணிக்கு சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.