காவிரி, மேகதாது, குண்டாறு, இலங்கை தமிழர்கள் என சட்டப்பேரவையில் ஆளுநர் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள்!
- புத்தாண்டு முடிவடைந்த பிறகு இந்தாண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை தொடங்கியது.
- இந்த சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அரசின் பல முக்கிய திட்டங்களை எடுத்துரைத்தார்.
2020 புத்தாண்டைஅடுத்து இந்தாண்டின் முதல் தமிழக அரசு சட்டப்பேரவை கூடியது. இந்த சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என அவர் உறுப்ப்பினர்கள் பங்கேற்றனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழக அரசின் திட்டங்களை எடுத்துரைத்தார். அவர் கூறிய சிறப்பு அம்சங்கள் இதோ,
- இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரசிறக்கு வலியுறுத்தப்படும்.
- முல்லை பெரியாறு அணையை வலுப்படுத்த மத்திய அரசும், கேரள அரசும் உதவிகள் செய்ய வேண்டும்.
- தமிழக மீனவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்படுவதை தடுக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
- தமிழகத்தில் வசிக்கும் தமிழர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் பாதுக்காக்க படுவார்கள்.
- மேகதாது அணை கட்ட கோரிக்கையை மத்திய அரசு நிராகரிக்கபட வேண்டும்.
- காவிரி – குண்டாறு ஆறுகள் ஒன்றாக இணைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்படும்.
- கோதாவரி நதியில் இருந்து 200 டி.எம்.சி தண்ணீர் மத்திய அரசிடம் இருந்து கேட்கப்படும்.
- முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மணிமண்டபம் 50.80 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் .
- நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு நாள் என அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன.
மேற்கண்ட அம்சங்கள் தான் தமிழக ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்தன.