டெல்லியில் மாணவர்கள், பேராசிரியர்கள் மீது தாக்குதல் – அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்

Default Image
  • டெல்லியில் ஜவர்ஹர்லால் நேரு பல்கலைக்கழத்தில்  மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது தாக்குதல் நடைபெற்றது.
  • இதற்கு பல தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

டெல்லியில் ஜவர்ஹர்லால் நேரு பல்கலைக்கழத்தில் நேற்று  ஜே.என் பல்கலைக்கழக மாணவர் அமைப்பு தலைவர் ஆயுஷ் கோஷ் உட்பட பல மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதல் இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த தாக்குதலுக்கு எதிராக போராட்டம் தொடங்கியுள்ளது.

டெல்லி பல்கலைகழத்தில் மாணவர்களை தாக்கியது ‘ ஏபிவிபி ‘ இடதுசாரி மாணவர் அமைப்பு குற்றச்சாட்டு

இந்த தாக்குதல் தொடர்பாக பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ மாணவர்கள் மீது முகமூடி அணிந்த கும்பல் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பேராசிரியர்கள் , மாணவர்கள் என பலர் பலத்த பலத்த காயமடைந்துள்ளனர். நாடு பாசிசவாதிகளிடம் சிக்கி தவித்து வருகிறது. மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பயத்தை காட்டுக்கிறது. ‘ என பதிவிட்டுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ ஜே.என்.யு வளாகத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியளிகிறது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திவரும் மாணவர்கள் மீது தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சமபவத்தில் தொடர்பான அனைவரது மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ‘ எனவும் தெரிவித்தார்.

அதே போல காங்கிரஸ் கட்சி பிரமுகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ நான் டிவியில் லைவ் பார்த்துக்கொண்டிருக்கும் போது, இந்த சம்பவம் நிகழ்வதை பார்த்து அதிர்ச்சியாகிவிட்டேன். காவல்துறை என்ன செய்துகொண்டிருக்கிறது. லைவ் ஒளிபரப்பாகும் போது இந்த தாக்குதல் நடைபெறுகிறது என்றால் இந்த தாக்குதல் கண்டிப்பாக அரசு ஆதாராவோடுதான் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்