NO CAA No NRC என்று அச்சிட்ட சட்டையுடன் சட்டசபையில் வெளிநடப்பு செய்த எம்எல்ஏ

Default Image
  • தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.
  • தமீமுன் அன்சாரி ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார்.

இன்று 15வது சட்டப்பேரவையின் 8ஆவது கூட்டத்தொடர் தொடங்கியது.2020-ஆம்  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றி வருகிறார் .ஆனால் ஆளுநரின் உரையை புறக்கணித்து ஏற்கனவே திமுக,காங்கிரஸ்,அமமுக உள்ளிட்ட கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

இதேபல் மனித நேய ஜனநாயக கட்சி சட்டமன்ற உறுப்பினர் தமீமுன் அன்சாரி ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார்.குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் NO CAA No NRC என்று அச்சிட்ட கருப்பு உடையில்  அவர் சட்டசபைக்கு சென்றார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  ஜனநாயகத்தை பாதுகாக்க சமூக நீதியை பாதுகாக்க போராடிய என் மீது நடவடிக்கை எடுத்தால் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் என்று  தமீமுன் அன்சாரி தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்