பிரதமர் நரேந்திரமோடி 4 நாடுகள் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார்!
பிரதமர் நரேந்திரமோடி 4 நாடுகள் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார். தனது பயணத்தின் முதல் கட்டமாக ஜோர்டான் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்குச் சென்ற அவர், அந்நாட்டுத் தலைவர்களுடன் இரு தரப்பு உறாவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்ற அவர், அபுதாபி பட்டத்து இளவரசர் முகமது பின் ஜாயத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார். முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாயின. 55 ஆயிரம் சதுர மீட்டரில் அபுதாபியில் அமையவுள்ள முதல் இந்துக் கோயிலுக்கு, அடிக்கல் நாட்டிய மோடி துபாயில் 6-வது உலக அரசாங்க மாநாட்டிலும் கலந்துகொண்டார். பயணத்தின் இறுதிக்கட்டமாக ஓமன் சென்ற பிரதமர் மோடி, மாலையில் டெல்லி திரும்பினார். விமான நிலையத்தில் பிரதமரை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வரவேற்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.