அவருக்கு வளர்பிறைக்கும் தேய்பிறைக்கும் வித்தியாசம் தெரியாது – கேஎஸ் அழகிரி
- திமுக தேய்கின்றன தேய்பிறை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
- ஜெயக்குமார் வளர்பிறைக்கும் தேய்பிறைக்கும் வித்தியாசம் தெரியாமல் பேசுகிறார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
அதிமுக வளர்கின்றன,வளர்பிறை .திமுக தேய்கின்றன தேய்பிறை .உள்ளாட்சி தேர்தல் திமுக மகத்தான வெற்றி பெற்றவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.அமைச்சர் ஜெயக்குமார் இவ்வாறு கூறிய நிலையில் இதற்கு பதில் அளிக்கும் விதமாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி கருத்து தெரிவித்துள்ளார் .அவர் கூறுகையில், உள்ளாட்சி தேர்தலில் எங்கள் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. அந்த வெற்றிக்காக திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம். இந்த வெற்றி சட்டமன்ற தேர்தலிலும் தொடரும்.
பிரதமர் மோடி, எதிர்கட்சிகள் பாகிஸ்தானுக்கு எதிராக பேசுங்கள். நாட்டில் உள்ள பிரச்சினைகளை திசை திருப்ப இவ்வாறு அவர் பேசுகிறார். அமைச்சர் ஜெயக்குமார் வளர்பிறைக்கும் தேய்பிறைக்கும் வித்தியாசம் தெரியாமல் பேசுகிறார். நாங்கள் தான் வளர்ந்து வருகிறோம்.குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில், கேரளாவில் நிறைவேற்றியது போன்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற திமுக போன்று நாங்களும் வலியுறுத்துவோம் என்று தெரிவித்தார்.