கிரிப்டோஜேக்கிங் தாக்குதலால் அரசு இணையதளங்கள் முடக்கம்!
அரசு இணையதளங்களை ஆஸ்திரேலியாவில் கிரிப்டோஜேக்கிங் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன.
பிரவுசர்களின் மூலம் ஊடுருவும் மால்வேர், பயனாளிகளுக்கே தெரியாமல் அவர்களின் கணினி உள்ளிட்ட சாதனங்களில் உள்ள கிரிப்டோ கரன்சி எனும் டிஜிட்டல் கரன்சியில் இருந்து குறிப்பிட்ட அளவு பணத்தை எடுப்பதாகும். பாதிக்கப்பட்ட இணையதளத்தில் நுழையும் பயனாளிகளின் சாதனங்களில் ஊடுருவும் மால்வேர், புதிதாக இன்ஸ்டால் செய்யும் பிரவுசர்களிலும் ஊடுருவத்தக்கது. இதே போல் ஆஸ்திரேலியாவின் விக்டோரிய நாடாளுமன்றம், சட்ட ரீதியான நிர்வாகத் தீர்ப்பாயம், நீர் விநியோகம் உள்ளிட்ட பல இணையதளங்களில் இந்த வகையான மால்வேர் ஊடுருவியுள்ளது.
இதேபோல், கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு எழுத்துருக்களை குரலாக மாற்றி ஒலிக்கச் செய்யும் பிரவுசரும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதால் அதன் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அரசு இணையதளங்களில் கூடுதல் பாதுகாப்பு அவசியம் என தொழில்நுட்ப வல்லுனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.