இந்தியாவிற்கு பாகிஸ்தான் எச்சரிக்கை !
பாகிஸ்தான் கூறியது, காஷ்மீர் மாநிலம் சுஞ்சுவான் தாக்குதலைக் காரணமாக்கி இந்தியா எல்லை தாண்டிய நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று கூறியுள்ளது.
சுஞ்சுவானில் குடியிருப்புடன் கூடிய ராணுவமுகாம் மீதான தீவிரவாதத் தாக்குதலில் 5 வீரர்கள் உள்ளிட்டோர் உயிரிழந்தனர். பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் – இ – முகமது தீவிரவாத இயக்கமே காரணம் என இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக அறிக்கையில், இந்தியா பாகிஸ்தான் மீது குற்றம்சுமத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைக் காரணமாக்கி பாகிஸ்தான் மீது எல்லை தாண்டிய தாக்குதல்களை நடத்தக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.