ஆண்டில் முதல் போட்டி ..! ஹிட் -மேன் இல்லாத இந்திய அணி வெற்றிபெறுமா?
- இந்தியா-இலங்கை இடையிலான முதல் டி20 போட்டி நடைபெற உள்ளது.
- ஆண்டில் முதல் போட்டியை இந்திய அணி வெல்லுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டி மற்றும் 3- டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றது .இந்த இரண்டு தொடரையும் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
தற்போது இலங்கை அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி இன்று அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் மைதானத்தில் ( Barsapara Cricket Ground) நடைபெறுகிறது.விராட் கோலி தலைமையிலான இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது .இந்த போட்டியில் ரோகித் சர்மாவிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி வீரர்கள் விவரம்: விராட் கோலி (கேப்டன்),ஷிகர் தவான், கே.எல் ராகுல், ரிஷப் பண்ட் , ஸ்ரேயஸ் அய்யர், ரவீந்திர ஜடேஜா, சிவம் தூபே, சாஹல், குல்திப் யாதவ், பும்ரா, நவ்தீப் சைனி, ஷ்ரதுல் தாகூர், மணிஷ் பாண்டே, வாஷிங்டன் சுந்தர், சஞ்சு சாம்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டின் முதல் போட்டி என்பதால் இந்திய அணி இந்த போட்டியை வெற்றிபெறும் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.