ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி! வேட்பாளரின் ஆதரவாளர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!
- தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் வெளியாகிவிட்டன.
- இதில் ஒரு வார்டு உறுப்பினர் பதவிக்கு ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி ஆதரவாளர்கள் தீக்குளிக்க முயற்சி.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகளும் பெரும்பாலும் வெளியாகிவிட்டன. இதில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழபுலியூர் சிலோன் காலனியில் கிராம வார்டு உறுப்பினர் பதவிக்கு வெள்ளைச்சாமி என்பவர் போட்டியிட்டார்.
அவருக்கு எதிராக போட்டியிட்ட செல்வராஜ் என்பவர் 197 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வெள்ளைச்சாமி 196 வாக்குகள் பெற்றார். இதனால் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெள்ளைச்சாமி தோல்வியை தழுவினார்.
இதன் காரணமாக மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என வேப்பூர் ஒன்றியம் தேர்தல் அதிகாரிகளை வெள்ளைச்சாமி ஆதரவாளர்கள் கூறியுள்ளார். ஆனால், அதிகாரிகள் மறுத்ததால் வெள்ளைச்சாமி ஆதரவாளர்கள் இரண்டு பேர் திடீரென தீக்குளிக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.