சித்திகரிக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்து சிக்கலில் சிக்கிய புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி..

Default Image
  • தவறான  வீடியோவை பகிர்ந்த புதுச்சேரி ஆளுநர்.
  • புதுச்சேரி ஆளுநரை புரட்டியெடுக்கும் நெட்டிசங்கள்.

நாம் அனைவரும் சமூக வலைதளங்களான வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட  ஊடகங்கள் வழியாக கிடைக்கும் தகவல்களை, சிறிதும்  யோசிக்காமலும், சரிபார்க்காமலும்,  உண்மை என நம்பி, அப்படியே அதனை பிறருக்கும்  பரப்புவதை, பலரும் செய்கின்றனர்.இந்நிலையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார்.

Embedded video

அந்த வீடியோவில், சூரியனில் இருந்து வெளிப்படும் சப்தமானது  ஓம் என்ற ஒலியுடன் ஓம் மந்திரத்தை ஒத்து இருப்பதாக அந்த வீடியோவில் கூறப்பட்டிருந்தது.உண்மையில், அது சித்தரிக்கப்பட்ட உண்மையில்லாத வீடியோ ஆகும். அந்த  போலி வீடியோவை புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடியும் பகிர்ந்துள்ள செய்தி  கிண்டலுக்கு ஆளாகியுள்ளாகியுள்ளார். சில ஆண்டுகளாகவே இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வந்த நிலையில், கிரண் பேடியும் தற்போது போலிச் செய்தியை பகிர்ந்து இதில்  சிக்கியுள்ளார்.சூரியனில் இருந்து வெளியாகும் வெப்ப அலைகளின் சப்தத்தை நாசா வெளியிட்டுள்ளது உண்மையே. ஆனால், புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி பகிர்ந்தது சித்தரிக்கப்பட்ட ஒன்று ஆகும் . இதனால் நெட்டிசங்கள் சமூக வலைதளங்களில் இந்த வீடியோ குறித்து தங்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்