டெபாசிட் இழந்த வேட்பாளர்! வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டிய வினோதம்!

- தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளில் நடைபெற்ற தேர்தல்களின் முடிவுகள் பெரும்பாலும் நிறைவடைந்துவிட்டன.
- இதில் ஊராட்சி ஒன்றியத்தில் வார்டு உறுப்பினர் போட்டியில் தோல்வியடைந்த முருகேசன் என்பவர் போஸ்டர் அடித்து நன்றி தெரிவித்தார்.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்று அதன் முடிவுகள் பெரும்பாலும் அறிவிக்கப்பட்டு விட்டன. இன்னும் ஒரு சில இடங்களில் சில காரணங்களால் முடிவு வெளியிடப்படவில்லை.
இதில் மதுரை சேட்டம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோதுவார்பட்டி ஊராட்சியில் 2 வார்டு உறுப்பினர் பதவிக்கு கட்டில் சின்னத்தில் முருகேசன் என்பவர் போட்டியிட்டார். அவர் அந்த தேர்தலில் டெபாசிட் இழந்தார்.
இதனை அடுத்து தனக்கு வாக்களிக்காமல் தோற்கடித்த வாக்காளர்க்கு நன்றி தெரிவித்து, நீங்கள் இப்படி செய்வீர்கள் என நினைக்கவில்லை எனவும் அந்த போஸ்டரில் எழுதியுள்ளார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!
April 17, 2025
அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
April 17, 2025