#Breaking : முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் காலமானார்

- சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பி.எச்.பாண்டியன் உடலநலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
- முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் காலமானார் .
பி. எச். பாண்டியன் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தபேரி என்ற இடத்தைச் சேர்ந்தவர். இவர் சேரன்மகாதேவியில் இருந்து 1977, 1980, 1984 ஆண்டுகளில் அதிமுக சார்பாக தமிழ்நாட்டுச் சட்ட மன்ற உறுப்பினராக இருந்தவர். 1980 முதல் 1985 வரை தமிழ்நாட்டுச் சட்டமன்றத் துணைத்தலைவராகப் பதவி வகித்தார். பிப்ரவரி 27, 1985 முதல் பிப்ரவரி 5, 1989 வரை தமிழ்நாட்டுச் சட்டமன்றத் தலைவராகப் பதவி வகித்தார். 1989-ஆம் அதிமுகவின் ஜானகி ராமச்சந்திரன் பிரிவிலிருந்து தமிழ்நாட்டுச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே உறுப்பினர் இவராவார். 1999-ஆம் ஆண்டு திருநெல்வேலி மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவின் அமைப்புச் செயலாளராகவும் இருந்தார்.
இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பி.எச்.பாண்டியன் உடலநலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025