மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்!? நம்ம வீட்டு பிள்ளை 2-ஆம் பாகமா?!

- சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு புதிய படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- இந்த படத்தை நம்ம வீட்டு பிள்ளை இயக்குனர் பாண்டியராஜ் இயக்க அதிக வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக நான் டாக்டர் திரைப்படம் தயாராகி வருகிறது. அதனை அடுத்து ‘இன்று நேற்று நாளை’ திரைப்பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு புதிய படமும் தயாராகி வருகிறது. அது போக இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் ஒரு படம், ‘ஹீரோ’ பட இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் ஒரு படம் என சிவா ஓகே செய்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இதுபோக சிவகார்த்திகேயனின் ஒரு புதிய படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும், அந்த படத்தை நம்ம வீட்டு பிள்ளை பட இயக்குனர் பாண்டிராஜ் இயக்க வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்படுகிறது. ஏற்கனவே, நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை இந்த படம் நம்ம வீட்டு பிள்ளை பாகம் இரண்டாக இருக்க கூட இருக்க அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
வரலாறு காணாத உச்சம்! 71 -ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை!
April 17, 2025
அமெரிக்கா விதித்த 245% வரி., சீனாவின் ரியாக்சன் என்ன?
April 17, 2025