கார்த்தி கூறிய சுவாரஸ்ய நிகழ்வு : தீரன் அதிகாரம் ஒன்று அப்டேட்
கார்த்தி நடிப்பில் விரைவில் வரவிருக்கும் திரைப்படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ இப்படத்தை சதுரங்க வேட்டை பட இயக்குனர் வினோத் இயகுகிறார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்.
இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கார்த்தி ‘எனக்கு இந்த கதை சிறுத்தை படத்தின் போதே வந்தது. அப்போது வேண்டாம் என்றேன். பின் மீண்டும் இதே கதை வந்தது. இந்தக்கதை நம்மை சுற்றி வருகிறது எனவே இதனை செய்யலாம் என முடிவு செய்தேன்.
பின் ராஜஸ்தானில் ஷூட்டிங் நடைபெற்றது அப்போது மிகவும் கஷ்டப்பட்டேன், அப்போது ஒரு குரல் இந்த படத்தில் கார்த்தி நடிக்கிறார் என தமிழ் குரல் கேட்கிறதே என்று பார்த்தபோது அந்த மக்கள் சென்னை என்றும், பூஜைக்காக இங்கே குடும்பத்தோடு வந்ததாகவும் கூறினர்’ என்றார்.
பின் ‘இப்படம் வழக்கமான போலிஸ் கதை போல இருக்காது இது முழு ஆக்சன் படம், இப்படத்தை பெண்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டும்’. எனவும் கூறினார்.