திருச்சி மாவட்டத்தில் ஜன.,6ல் பள்ளிகள் திறக்கவில்லை-இந்நாளில் தான் பள்ளிஆட்சியர்
- தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு ஜனவரி 6ம் தேதி பள்ளி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.
- திருச்சி மாவட்டல் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பொதுவிடுமுறை என்பதால் ஜன.,6க்கு பதில் ஜன.,7ல் பள்ளி திறக்கப்படும் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டது.அளிக்கப்பட்ட விடுமுறை காட்டிலும் சில நாட்கள் அதிகமாகவே விடுமுறையை கழித்த மாணவ கண்மனிகளுக்கு பள்ளிகள் ஜன.,4 ல் திறக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையானது பணி தொடர்வதால் ஜனவரி 6ம் தேதி அன்று திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை தற்போது அறிவித்துள்ளது.
ஆனால் திருச்சி மாவட்டத்தில் ஜனவரி 6ம் தேதி அன்று வைணவத் தலமாக ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிவிலில் சொர்க்கவாசல் திறப்பு வைபவம் நடைபெற உள்ளதால் அன்றைய நாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.ஆகையால் ஜனவரி 6ல் திருச்சி மாவட்டத்தில் பொதுவிடுமுறை என்பதால் அன்று பள்ளிகள் திறக்கப்படாது அதற்கு பதிலாக திருச்சி மாவட்டத்தில் மட்டும் ஜன.7-ம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிவித்துள்ளார்.திருச்சி மாவட்டத்தை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு ஜன.,6 பள்ளி திறக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது