இந்தியாவின் இடத்தை பறித்த சீனா!பறிபோன இந்தியாவின் முதலிடம்….
சீனாவுக்கு மாலத்தீவில் இந்தியாவுக்கு இருந்த முதலிடம் மாறி வருவதாகக் கூறப்படுகிறது.
1981ஆம் ஆண்டில் இருந்தே இந்தியாவுக்கும் மாலத்தீவுகளுக்கும் தடையற்ற வணிக உறவு இருந்து வருகிறது. மாலத்தீவுகளுக்கு இந்தியாவில் இருந்தே உணவு உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் செல்கின்றன. அதேபோல் மாலத்தீவில் உற்பத்தி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் சந்தையாக இந்தியா விளங்குகிறது.
இந்நிலையில் 2011இல் முகமது நசீது ஆட்சியில்தான் மாலேயில் சீனத் தூதரகம் திறக்கப்பட்டது. அதன்பின்னர்தான் மாலத்தீவில் சீனாவின் வணிக நடவடிக்கைகள் தொடங்கின. அப்துல்லா யாமீனின் காலத்தில் சீனாவுடனான மாலத்தீவின் உறவு மேலும் வலுவடைந்துள்ளது.
கடந்த ஆண்டு சீனாவுடன் தடையற்ற வணிக உடன்பாட்டில் அப்துல்லா யாமீன் கையெழுத்திட்டார். இதையடுத்துப் பல தீவுகளில் சீன நிறுவனங்கள் பலவும் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் அங்கு இந்திய நிறுவனங்களின் நலன் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.