மகனும் தோல்வி,மகளும் தோல்வி – காரணத்தை கூறிய அதிமுக முன்னாள் எம்.பி.

Default Image
  • அதிமுகவின் முன்னாள் எம்.பி. அன்வர் ராஜாவின் மகள் மற்றும் மகன் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளனர்.
  • இது குறித்து அன்வர் ராஜா விளக்கம் அளித்துள்ளார்.  

தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. நேற்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.ஒரு சில மாவட்டங்களில் இழுபறி நிலை நீடித்து வரும் நிலையில் அநேக இடங்களில் வேட்பாளர்களின் வெற்றி அறிவிக்கப்பட்டு வருகிறது.

அதிமுக முன்னாள் எம்.பி .அன்வர் ராஜா ஆவார்.இவர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்.உள்ளாட்சித் தேர்தலில் இவரது மகள் ராவியத்துல் அதரியா ராமநாதபுரம் மண்டபம் ஒன்றியம் 2 வது வார்டில் போட்டியிட்டார்.ஆனால் இவரை எதிர்த்து போட்டியிட்ட  திமுக வேட்பாளர் சுப்பு லட்சுமியிடம் 1343  வாக்குகள் குறைவாக  பெற்று தோல்வி அடைந்தார். அன்வர் ராஜாவின் மகனும் தோல்வி அடைந்தார்.மண்டபம் ஒன்றியம் 16- வது வார்டில் போட்டியிட்ட  அன்வர் ராஜாவின் மகன் நாசர் அலியை திமுக வேட்பாளர் தவ்பீக் அலி தோற்கடித்தார்.

இந்நிலையில் இது குறித்து அதிமுக முன்னாள் எம்.பி.அன்வர் ராஜா கூறுகையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்ததால் அதிமுகவுக்கு சிறுபான்மையினர் வாக்களிக்கவில்லை.  தேசிய குடியுரிமை பதிவேடு நாடு முழுவதும் அமலாகும் என்ற அச்சம் சிறுபான்மையினர் மத்தியில் நிலவுகிறது.இதனால் அதிமுக தனது முடிவில் பரிசீலனை செய்யும் என்று நம்புவதாக கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்