தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படம் இதனை பற்றிதான் பேச உள்ளதா?! அப்போ படம் தெறி ஹிட் தான்!
- தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் திரைப்படம் தயாராகி வருகிறது.
- இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். விஜய் சேதுபதி வில்லனாக இப்படத்தில் நடித்து வருகிறார்.
தளபதி விஜய் அடுத்ததாக தனது 64வது படமான மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகி வருகிறது. படத்தினை கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் இப்படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் கதை பற்றி கோலிவுட்டில் ஒரு தகவல் பரவி வருகிறது.
அதாவது இப்படம் 2011இல் வெளியான கொரிய படமான சைலன்ஸ்டு ( Silenced ) எனும் படத்தின் தழுவல் என கூறப்படுகிறது. இப்படத்தில் மாற்று திறனாளி குழந்தைகள் பள்ளியில் நடக்கும் பாலியல் குற்றங்களை களையும் ஒரு ஹீரோவின் கதையாக வடிவமைக்கப்பட்டிற்குக்கும். இந்த கொரியா படமானது தி குரிசிபிள் எனும் புத்தகத்தை வைத்து எடுக்கப்பட்டது. அந்த புத்தகமானது கொரியாவில் நடந்த உண்மை சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இந்தமாதிரியான பாலியல் குற்றங்களை பற்றித்தான் மாஸ்டர் படம் இருக்கும் என கூறப்பட்டது.
ஆனால் மாஸ்டர் படம் சொந்த கதை எனவும், அது எந்த படத்தின் தழுவல் இல்லை எனவும் படக்குழு சார்பில் கூறப்பட்டு வருகிறது. எது எப்படியோ ரசிகர்கள் எதிர்பார்கும் அம்சங்கள் மாஸ்டரில் இருந்தால் படம் தெறி ஹிட் தான்.