வாக்கு எண்ணிக்கை முறையா நடக்குதா-இல்லையா..? ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் அரை

Default Image
  • வாக்கு எண்ணிக்கை முறையாக நடக்கிறதா..? என்று திமுக தாக்கல் செய்த மனு குறித்து உயர்நீதிமன்றம் ஆனையத்திற்கு ஆர்டர்
  • சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருப்பதை ஆணையம் நாளை மாலை 4 மணிக்குள் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு

தமிழகத்தில் மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆனது 2 கட்டங்களாக கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது.இந்நிலையில் தற்போது நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கும் எண்ணும் பணியானது காலையிலிருந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இந்த வாக்கு எண்ணிக்கையில் மொத்தம் உள்ள 5090 ஒன்றிய உறுப்பினர்களில் அ.தி.மு.க  மற்றும் அதன் கூட்டணிகள் 926 இடங்களையும்,எதிர்கட்சியான  தி.மு.க மற்றும் அதன்  கூட்டணிகள் 1078 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளது.இரவிலும் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி கவுன்சிலர் பதவிக்கான மொத்தம் 515 இடங்களுக்கு போட்டிட்ட  அதிமுக 177 இடங்களிலும்,திமுக 178 இடங்களிலும் , ஒன்றிய கவுன்சிலர் பதிவிக்கான மொத்தம் 5067 இடங்களுக்கு போட்டியிட்ட அதிமுக 1209 இடங்களிலும்,திமுக 1196 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு காலை முதல் வாக்கு எண்ணும் பணி தீவிரமாக இரவு வேளையிலும் நடந்து கொண்டு வருகிறது.திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வெற்றி அறிவிப்பில் தாமதம் எனக்கூறி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இது குறித்து ஸ்டாலின் கூறுகையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை நோக்கி முந்திச் சென்று கொண்டிருப்பதாகவும், திமுகவின் இந்த வெற்றியை தடுத்து நிறுத்துவதற்காகவே ஆளும் அதிமுக , காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் சதி செய்வதாக குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்த போதிலும் நடவடிக்கை எடுக்கப்படாததால் தான் நீதிமன்றத்தை நாட உள்ளோம் என்று கூறியிருந்தார்.இந்நிலையில் திமுக சார்பில் இன்று பிற்பகலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவானது  செய்யப்பட்டது. அதில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் முறைகேடு நடப்பதாகவும், எடப்பாடி,  திண்டுக்கல், சங்ககிரி, கரூர்,உள்ளிட்ட பல பகுதிகளில் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் செய்கின்றனர் என்று மனுவில் குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்டது.மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக இன்று மாலையே விசாரிக்க வேண்டும் என்று திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் உயர்நீதிமன்ற அவசர வழக்காக நீதிபதிகள்  விசாரிக்க மறுத்துவிட்டனர்.ஆனால் இரவில் ஒரு உத்தரவினை தேர்தல் ஆணையத்திற்கு உறுதிபட தெரிவித்துள்ளனர். அதில் வாக்கு எண்ணிக்கை முறையாக நடக்கிறது என்ற உறுதி மொழியையும்,சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருப்பதை ஆணையம் உறுதி செய்ய வேண்டும் மேலும் ஆணையம் நாளை மாலை 4  மணிக்குள் எழுத்துபூர்வமாக  அறிக்கை அளிக்க வேண்டும் என்று  நீதிபதி சத்தியநாராயணன் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live
arrest
bipin rawat accident pilot
mk stalin eps
Viduthalai Part 2 Movie Twitter Review
Su Venkatesan MP
Court - Nellai