நாம் தமிழர் கட்சிக்கு முதல் வெற்றி..!தேர்தல் பஞ்சாயத்துக்கள் இதோ..!

Default Image
  • உள்ளாட்சி தேர்தலில் தனியாக நின்று போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில் வெற்றி வாகை
  • கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் சுனில் வெற்றி பெற்றுள்ளார்

தமிழ்கத்தில் மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆனது 2 கட்டங்களாக கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது.இந்நிலையில் தற்போது நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கும் எண்ணும் பணியானது காலையிலிருந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இந்த வாக்கு எண்ணிக்கையில் மொத்தம் உள்ள 5090 ஒன்றிய உறுப்பினர்களில் அ.தி.மு.க  மற்றும் அதன் கூட்டணிகள் 926 இடங்களையும்,எதிர்கட்சியான  தி.மு.க மற்றும் அதன்  கூட்டணிகள் 1078 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளது.

Image

உள்ளாட்சி தேர்தலில் தனியாக நின்று போட்டியிட்ட சீமானின் நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில் வெற்றி வாகை சூடியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினராக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சுனில் வெற்றி பெற்றுள்ளார்.உள்ளாட்சி தேர்தலில் அக்கட்சி பெறும் முதல் வெற்றி இதுவாகும் அந்த பெருமையை அக்கட்சியின் சுனில் ஏற்படுத்தி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்