போலி செய்திகளுக்கு சிறப்பு அம்சத்தை கொண்டு வந்த இன்ஸ்டாகிராம்.!

Default Image
  • இன்ஸ்டாகிராம் நிறுவனம் போலி செய்திகளை கண்டறியும் பணிகளை துவங்கி உள்ளது.
  • இன்ஸ்டாகிராமில் போலி செய்திகள் முழுமையாக மறைக்கப்பட்டு அதன் மீது தவறான தகவல் என குறியீடு வாடிக்கையாளர்களுக்கு தெரியும் படி செய்யப்படுகிறது.

தற்போது உள்ள சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமாக இருப்பது இன்ஸ்டாகிராம். இந்த செயலியை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.அதிலும் சினிமா துறையில் உள்ள சில முக்கிய பிரபலங்கள் தங்களின் புகைப்படங்களை வெளியிடுவது, தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

சில அரசியல் தலைவர்களும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சில இன்ஸ்டாகிராமில் சில போலி செய்திகளும் அவ்வப்போது பரவி வருகிறது. அதை தடுப்பதற்காக இன்ஸ்டாகிராம் நிறுவனம் போலி செய்திகளை கண்டறியும் பணிகளை துவங்கி உள்ளது. அப்படி வரும் போலி செய்திகளை முழுமையாக மறைத்து, அதன் மீது போலி செய்தி என குறிப்பிட துவங்கியுள்ளது.

போலி செய்திகளை கண்டறியும் குழுக்களுடன் இணைந்து செயல்பட இருப்பதாக ஏற்கனவே இன்ஸ்டாகிராம் அறிவித்து இருந்தது. இதை தொடர்ந்து போலி செய்திகளை வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தும் வேலைகளை இந்த குழுக்கள் செய்து வருகின்றனர்.

இந்த சிறப்பு அம்சம் ஃபேஸ்புக்கில்  ஏற்கனவே உள்ளது.தற்போது இன்ஸ்டாகிராமில் போலி செய்திகள் முழுமையாக மறைக்கப்பட்டு அதன் மீது தவறான தகவல் என குறியீடு வாடிக்கையாளர்களுக்கு தெரியும் படி செய்யப்படுகிறது.

இதில் இரண்டு அம்சங்கள் உள்ளது. ஓன்று “See Why” மற்றொன்று “See Post” அம்சம் உள்ளது. இரு அம்சங்களில் முதலாவது அம்சம் கொண்டு ஏன் அது தவறான தகவல் என்பதை வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ள முடியும். இரண்டாவது அம்சம் மூலம் வாடிக்கையாளர்கள் தவறான பதிவை பார்க்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்