அடி தூள்.! ‘குவா குவா’ சத்தத்துடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையில் இந்தியாவுக்கு முதலிடம்.!
- உலகம் முழுவதும் புத்தாண்டு தினத்தன்று பிறந்த குழந்தைகளின் விவரங்களை யுனிசெப் வெளியிட்டுள்ளது.
- நாடுகள் அடிப்படையில் புத்தாண்டில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
புத்தாண்டு தினத்தை நள்ளிரவு 12 மணிக்கு மக்களின் ஆரவாரத்துடன் உற்சாகமாக வாண வேடிக்கைகள் முழங்க புத்தாண்டு தினம் பிறந்தது. உலகம் முழுவதும் நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்த அதே நேரத்தில் ‘குவா குவா’ என்ற சத்தத்துடன் பிறந்த குழந்தைகளை குறித்த விவரங்களை யுனிசெப் வெளியிட்டுள்ளது.
அதில் வெளியிட்ட அறிக்கையில், 2020 புத்தாண்டை முன்னிட்டு உலகம் முழுவதும் 3,92,078 குழந்தைகள் பிறந்துள்ளன. நாடுகள் அடிப்படையில் புத்தாண்டில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் 67,385 குழந்தைகளும், சீனாவில் 46,299 குழந்தைகளும் பிறந்துள்ளன. அடுத்தடுத்த இடங்களில் நைஜீரியா 26,039, பாகிஸ்தான் 16,787, இந்தோனேசியா 13,020 ஆகிய நாடுகள் உள்ளன.
மேலும் 2018-ம் ஆண்டில் குறை மாதத்தில் பிரசவம், சிக்கலான பிரசவம், தொற்று நோய்கள் உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக, மொத்தம் 25 லட்சம் குழந்தைகள், பிறந்த ஒரு மாதத்திற்குள்ளாக இறந்துள்ளது. எனினும் மருத்துவத் துறையில் ஏற்பட்ட சிறப்பான முன்னேற்றங்கள் காரணமாக, ஒரே மாதத்தில் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 47% சதவீதம் குறைந்துள்ளது என யுனிசெப் குறிப்பிட்டுள்ளது.