வேறு வழியில்லை ,ரயில் கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ளுங்கள்- ராமதாஸ்
- ரயில் கட்டண உயர்வு கடந்த 31-ஆம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.
- ரயில் கட்டண உயர்வை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ரயில் கட்டணம் தொடர்பாக ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில்,சாதாரண ரயில்களில் கட்டணம் ஒரு கிலோமீட்டருக்கு ஒரு பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி இல்லாத விரைவு ரயில் கட்டணம் கிலோமீட்டருக்கு ரெண்டு பைசாயும் , குளிர்சாதன வசதி வகுப்புகளுக்கு கிலோமீட்டருக்கு 4 பைசா கட்டணம் அதிகரிக்கப்பட்டது.
இந்த கட்டண உயர்வு சதாப்தி மற்றும் ராஜதானி ஆகிய ரயில்களுக்கும் பொருந்தும் என ரயில்வே நிர்வாகம் தெரிவிக்கப்பட்டது.மேலும் ஏற்கனவே முன்பதிவு செய்த டிக்கெட்களுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகையில், 5 ஆண்டுகளாக கட்டணம் உயர்த்தப்படாதது, இயக்கச் செலவுகள் அதிகரிப்பு காரணங்களால் ரயில் கட்டண உயர்வை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் தூய்மை என்பது பெரும் பற்றாக்குறையாக உள்ளது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.