அதிகாலை சென்னையில் பல இடங்களில் கனமழை .!
- இன்று அதிகாலை சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.
- மேலும் 4 நாட்கள் நீடிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. அதில் கோடம்பாக்கம், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர்,மீனம்பாக்கம், பல்லாவரம் கனமழை பெய்தது.
கனமழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது காரணமாக வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் கடும் கடும் சிரமப்பட்டனர். வடகிழக்கு பருவமழை நேற்று முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மழை மேலும் 4 நாட்கள் நீடிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.