இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கோரிக்கை!எந்த சேவையையும் மறுக்கக் கூடாது ….
மத்திய அரசை ஆதார் எண் இல்லாத காரணத்திற்காக எந்த ஒரு குடிமகனுக்கும், எந்த ஒரு சேவையும் நிறுத்தப்படக் கூடாது என்று தனித்துவ அடையாள ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு அனுப்பிய கடிதத்தில் மருத்துவம், மாணவர் சேர்க்கை, குடும்ப அட்டை போன்ற எந்த ஒரு அரசு சேவைக்கும் ஆதார் எண் இல்லாத காரணத்தால் குடிமக்களின் உரிமைகள் மறுக்கப்படக்கூடாது என்று தனித்துவ அடையாள ஆணையம் கோரியுள்ளது.
அண்மையில் ஆதார் அட்டை இல்லாத பொதுமக்களுக்கு சேவைகள் மறுக்கப்படுவதாக ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளை அடுத்து இந்த கோரிக்கையை மத்திய அரசுக்கு தனித்துவ அடையாள ஆணையம் விடுத்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
.