புத்தாண்டு கொண்டாட்டம்- சென்னையை சுற்றிப்பார்க்க 10 ரூபாயில் ஏற்பாடு

Default Image
  • புதிய ஆண்டு இன்று பிறந்துள்ளது. 
  • புத்தாண்டை முன்னிட்டு  சுற்றுலாத்தளங்களை சுற்றிப்பார்க்க வசதி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

இன்று புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது .புத்தாண்டை முன்னிட்டு சென்னை முழுவதும் உள்ள சுற்றுலாத்தளங்களை சுற்றிப்பார்க்க வசதி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில்,தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், மக்களிடையே சுற்றுலாவை பிரபலபடுத்தும் நோக்கத்துடனும் ரூ.10 கட்டணத்தில் சென்னை நகரத்தில் (எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம்) புத்தாண்டு அன்று ஒரு நாள் மட்டும் 1.1.2020 அன்று சிறப்பு சுற்றுலாவை அறிமுகப்படுத்தி உள்ளது.

சுற்றுலா வளாகத்தில் இருந்து சுற்றுலாப் பொருள்காட்சி (தீவுத் திடல்) தொடங்கி மெரினா கடற்கரை, விவேகனந்தர் இல்லம், கலங்கரை விளக்கம், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி பேராலயம், அஷ்டலட்சுமி கோயில், ஆறுபடை முருகன் கோயில், கிண்டி குழந்தைகள் பூங்கா ஆகிய இடங்களுக்குச் சென்று திரும்பும் வகையில் சுற்றுலா மேற்கொள்ளலாம்.இன்று  காலை 9.00 மணியில் இருந்து மாலை  6.00 மணி வரை இயக்கப்படுகிறது. இதற்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. காலை 9.00 மணியில் இருந்து மாலை  6.00 மணி வரை செல்லத்தக்கதாகும்.சுற்றுலாப் பயணிகளை ஒரு இடத்தில் இருந்து அடுத்த சுற்றுலா மையத்துக்கு அழைத்துச் செல்லும் குறிப்பிட்ட இடங்களில் எங்கு வேண்டுமானாலும் ஏறலாம், எங்கு வேண்டுமானாலும் இறங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்