இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும்- பாமக பொதுக்குழுவில் தீர்மானம்
- பாமக பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- தீர்மானத்தில் தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
பாமக பொதுக்குழு நடைபெற்றது.இந்த பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஈழத்தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும். தமிழகத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) திட்டத்தை செயல்படுத்தக் கூடாது.
தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும். அதற்காக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். காவிரி – கோதாவரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (OBC) 27% இடஒதுக்கீடு தேவை. தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஹைட்ரோகார்பன் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும்.தமிழ்நாட்டில் ரூ. 1 லட்சம் கோடியில் நீர்ப்பாசனப் பெருந்திட்டத்தை செயல்படுத்த மத்திய,மாநில அரசுகள் நிதி ஒதுக்க வேண்டும். காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களுக்கு உடனடி விடுதலை (அ) காலவரையற்ற பரோல் வழங்க வேண்டும்.
புவிவெப்பமயமாதலை கட்டுப்படுத்த காலநிலை அவசரநிலையை பிரகடனம் செய்க. தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் தனியார்த்துறை வேலைவாய்ப்புகளில் 80% உள்ளூர் ஒதுக்கீடு தேவை.படிப்படியாக முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த நடவடிக்கை வேண்டும். புதுச்சேரிக்கு முழுமையான மாநிலத் தகுதி வழங்க சட்டம் இயற்ற வேண்டும் என்று நிறைவேற்றப்பட்டது.