நான் அரசியலுக்கு வருவது உறுதி- அரசியல் பிரவேசத்தை ரஜினி அறிவித்து 2 ஆண்டுகள் நிறைவு

Default Image
  • ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் மறுக்க முடியாத நடிகர் ஆவார்.
  • இன்றோடு அவர் அரசியல் பிரவேசத்தை அறிவித்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 

கடந்த 2017 ஆண்டு டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை ராகவேந்திர மண்டபத்தில் சந்தித்தார்.அப்பொழுது அவர் ரசிகர்கள் மத்தியில் பேசுகையில்,சட்டப்பேரவை தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நிற்க முடிவு செய்துள்ளேன்.நான் எல்லாம் பண்ணிட்டேன். இனி அம்பு விடுறதுதான் பாக்கி. அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம் என்று பேசினார். இது முதலே ரஜினியின் அரசியல் எதிர்பார்ப்பு அதிகரித்தது.ஆனால் அதன் பிறகு பெரிதாக அவர் ஏதும் கூறவில்லை.அவர் அறிவித்த முதலே அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இது முதலே அவர் அரசியல் கட்சி ஆரம்பிப்பார் என்று அவரது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர்.

ஆனால் தமிழகத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை மற்றும்  இடைத்தேர்தல் ஆகிய இரண்டிலும் ரஜினி போட்டியிடவில்லை. இதற்கு இடையில் நடிகர் ரஜினி கூறியதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது கமல் குறித்த பேச்சு தான் .ஆனால் ரஜினி -கமல் என இருவரும் அரசியலில் இணைய வேண்டும் என்ற கருத்து நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.இந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கமல் 60 விழா நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பல்வேறு திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.இதில் நடிகர் விஜய்யின் தந்தையும்,இயக்குனருமான சந்திரசேகர் பேசினார்.அவர் பேசுகையில்,ரஜினியும் கமலும் இணைந்து அரசியல் செய்தால் தமிழ்நாட்டிற்கு நல்லது என்று தெரிவித்தார்.இவர் கூறியது முதல் இந்த கருத்து அதிகம் உலாவி வந்தது.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனிடம் ரஜினி குறித்து கேட்டபோது,அவசியம் ஏற்பட்டால் நானும் ரஜினியும் அரசியலில் இணைந்து பணியாற்றுவோம் என்று தெரிவித்தார்.இந்த கருத்தை கமல் தெரிவித்த சிறிது நேரத்திலேயே ரஜினிகாந்த் இது குறித்து கூறுகையில்,மக்களின் நலனுக்காக கமலுடன் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவேன் என்று தெரிவித்தார்.இருவரும் ஒரே மாதிரியான கருத்துக்களை தெரிவித்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதன் விளைவாக அரசியல் கட்சியினரும் கருத்து தெரிவித்தார்கள்.இது ஒரு புறம் இருக்க மறு புறம்  தற்போது நடந்த முடிந்த உள்ளாட்சித் தேர்தலிலும் அவர் போட்டியிடவில்லை,மேலும் யாருக்கும் ஆதரவு அளிக்க வில்லை என்றும் தெரிவித்தார்.அவரின் அரசியல் குறித்த பேச்சுக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் அவருக்கு பின்னால் கட்சி தொடங்குவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்து தேர்தலிலும் போட்டியிட்டு தனது வாக்கு வங்கியினை ஓரளவு தாக்கு பிடித்துள்ளார்.ரஜினியின் முழு நேர அரசியலை எதிர்பார்த்து அவர்களது ரசிகர்களை போல அனைத்து தரப்பினரும் காத்து இருக்கின்றனர்.ஏனென்றால்  இன்றோடு அவர் அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்து 2 ஆண்டுகள் நிறைவடைகிறது .இனி வரும் நாட்களில் தான் அவர் அரசியல் வருகை குறித்து தெரியவரும் .. அதுவரை காத்திருப்போம்…

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்