கோமாளி இயக்குனருக்கு மறக்க முடியாத பரிசளித்த ‘கமர்சியல் கிங்’ கே.எஸ்.ரவிக்குமார்!
- கோமாளி படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தற்போது அடுத்த பட வேலையில் பிசியாக இருக்கிறார்.
- இவருக்கு தங்க செயின் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.
ஜெயம் ரவி நடிப்பில் அண்மையில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் கோமாளி. படம் முழுக்க நகைச்சுவையாகவும், நல்ல கருத்துள்ள கதைக்களமாகவும் படமெடுத்து நல்ல இயக்குனராக பெயரெடுத்துவிட்டார் அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்.
இவர் இயக்கத்தில் அடுத்ததாக புதிய பட வேளைகளில் பிசியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு கமர்சியல் கிங் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தங்க செயின் ஒன்றை நினைவு பரிசாக வழங்கியுள்ளார். கே.எஸ்.ரவிக்குமார் கோமாளி படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.