குடியிருப்பை அகற்றும் மக்களுக்கு அடுக்குமாடி வீடு வழங்க வேண்டும்.! திருமாவளவன் கோரிக்கை.!

Default Image
  • மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் கூவம் கரையோர ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் பணி கடந்த நாட்களுக்கு முன் நடைபெற்றது.
  • விசிக தலைவர் திருமாவளவன் தீவுத்திடல் மக்கள் தற்போது அகற்றப்பட்டார்கள்  என தெரிவித்தார்.

மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் கூவம் கரையோர ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் பணி கடந்த நாட்களுக்கு முன் நடைபெற்றது. இதனால் அங்குள்ள 2000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பெரும்பாக்கத்தில் இடமாற்றம் செய்வதாக கூறப்பட்டது , இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கும் என் புகார் அளித்தனர்.

கூவம் கரையோர ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் பணி.! மாணவர்களின் படிப்பு பாதிப்பு.!

சென்னை தீவுத்திடல் அருகே 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் காந்தி நகர் பகுதி மக்களை காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கு எதிராக போராடியவர்களும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து தீவுத்திடலில் உள்ள குடியிருப்பு வாசிகளை விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

பின்னர் செய்தியளார்களிடம் பேசிய நல்லக்கண்ணு, குடியிருப்பு மக்களை பெரும்பாக்கத்திற்கு அப்புறப்படுத்துவது கண்டிக்கத்தக்கது எனவும், அதை தொடர்ந்து பேசிய திருமாவளவன், தீவுத்திடல் மக்கள் தற்போது அகற்றப்படமாட்டார்கள் என முதலமைச்சர் பழனிசாமி உத்தரவாதம் அளித்திருப்பதாக சுட்டிக்காட்டினார். பின்னர் அப்புறப்படுத்தப்பட உள்ள மக்களுக்கு அங்கேயே அடுக்குமாடி குடியிருப்பு வழங்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்