இளையராஜாவுக்கு இணையான கலைஞன் பிறந்து வருவது கஷ்டம்! இசைஞானி குறித்து பாரதிராஜா நெகிழ்ச்சி!

Default Image
  • விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்து இளையராஜா இசையமைத்து வரும் திரைப்படம் தமிழரசன்.
  • இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. அதில் பாரதிராஜா கலந்து கொண்டு பேசினார்.

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் தமிழரசன். இந்த திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினராக இயக்குனர் இமயம் பாரதிராஜா கலந்து கொண்டார்.

அவர் பேசுகையில், இளையராஜாவுடன் எனக்கு பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டாலும் அவருடன் நிறைய படங்கள் பணியாற்றி உள்ளேன். எனது படங்கள் இன்றளவும் நிற்பதற்கு முக்கிய காரணம் படத்தின் இசை படத்தின் உயிர்நாடியாக இருப்பது தான். என் படம் இளையராஜாவின் இசையால் மட்டுமே பேசும். எந்த இடத்தில் இசை வர வேண்டும் அது எவ்வளவு சத்தமாக இருக்க வேண்டும் என்பதை சரியாக தீர்மானிப்பது அவர் மட்டுமே.

ஒன்றுமே இல்லாமல் படத்தினை கொடுத்தால் கூட தன் இசையால் படத்தை ரசிக்க வைத்து விடுவார் இசையமைப்பாளர் இளையராஜா. தமிழகத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வரம் இளையராஜா. அவரை போல இன்னொரு கலைஞன்  பிறந்து வருவது கஷ்டம். விஜய் ஆண்டனி பார்க்கும் போது சாதாரணமாக இருக்கிறார். ஆனால், படத்தில் வேறு விதமாக தெரிகிறார். விமான பயணம் செய்யும்போது அவரை நேரில் பார்த்தேன் நல்ல இசையமைப்பாளர் ஏன் நடிக்க வந்தார் என்று யோசித்திருக்கிறேன். என தனது பேச்சை முடித்துக்கொண்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 07042025
Waqf Bill Discussion Breaks Record
TN RAIN
True Value Homes - ed
GTvsSRH -IPL2025
Ajith Kumar’s Cut-Out Crashes
csk vs kkr tickets