மக்கள் செல்வனுடன் மோதும் மாளவிகா மோகனன்! தளபதி 64 மாஸ் அப்டேட்!

- தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக அவரது 64வது திரைப்படம் தயாராகி வருகிறது.
- இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
தளபதி விஜய் தற்போது அவரது 64ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார். மாளவிகா மோகன் இப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். சேவியர் பிரிட்டோ இப்படத்தை தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் தற்போது விரைவாக நடைபெற்று வருகிறது. தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் தளபதி விஜய் தன் குடும்பத்தாருடன் விடுமுறையில் உள்ளார். அதேபோல நாயகி மாளவிகா மோகனன் விடுமுறையில் உள்ளார்.
இப்படத்தில் விஜய்யும் விஜய் சேதுபதியும் மோதும் சண்டைக் காட்சி அண்மையில் படமாக்கப்பட்டதாம். அதேபோல விஜய் சேதுபதியும் மாளவிகாவும் மோதும் சண்டை காட்சியும் படமாக்கப்பட்டதாம். இது பற்றி தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் மாளவிகா மோகனன் பாடலுக்கு மட்டும் நடித்துவிட்டு நாயகியாக மட்டுமல்லாமல், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது தற்போது தெளிவாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025