உள்ளாட்சித்தேர்தல் : மறுவாக்குப்பதிவு
- ஊரக உள்ளாட்சிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
- தேர்தலில் வாக்குச்சீட்டை மாற்றி வழங்குதல், சின்னங்களை மாற்றி அச்சடித்தல் உள்ளிட்ட காரணங்களால் மறுவாக்குப்பதிவு 30 வாக்குச்சாவடிக்கு மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் தற்போது மூன்று வருடம் கழித்து உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதன் படி முதற்கட்டதேர்தல் கடந்த 27-ஆம் தேதியும் ,இரண்டாம் கட்ட நேற்று நடைபெற்றது.
கடந்த 27-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலின் போது தேர்தலில் வாக்குச்சீட்டை மாற்றி வழங்குதல், சின்னங்களை மாற்றி அச்சடித்தல் போன்ற பல புகார்கள் எழுந்த நிலையில் சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டு பின்னர் வாக்குப்பதிவு நடைபெற்றது.
எனவே கடந்த 27-ஆம் தேதி நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 30 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, அரியலூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம்,புதுக்கோட்டை, பெரம்பலூர், திருவாரூர் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள 30 வார்டுகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.