முப்படைகளின் தலைமை தளபதியாக ராணுவ தளபதி பிபின் ராவத் நியமனம் என தகவல்.!
- இந்திய ராணுவத்தில் முப்படை தலைமை தளபதி என்ற புதிய பதவி அண்மையில் தான் உருவாக்கப்பட்டது.
- அதில் முப்படைகளின் தலைமைத் தளபதியாக ராணுவ தளபதி பிபின் ராவத் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய ராணுவத்தில் முப்படைகளுக்கும் தனித்தனியே தலைமை தளபதிகள் உள்ளனர்.. ராணுவ ஜெனரல், கடற்படை தலைமை தளபதி, விமானப் படை தலைமை தளபதி ஆகியோர் இதுவரை முப்படைகளின் தலைமை தளபதிகளாக இருந்தனர்.
இந்த முப்படைகளுக்கும் சேர்த்து தலைமை தளபதி ஒருவரை நியமிப்பது தொடர்பாக நீண்டகாலமாக மத்திய அரசு ஆலோசித்து வந்தது. அண்மையில் சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்ததையடுத்து முப்படைகளின் தலைமைத் தளபதி பதவியை உருவாக்கப்பட்டு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. தற்போது முப்படைகளின் தலைமைத் தளபதியாக ராணுவ தளபதி பிபின் ராவத் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், முப்படைகளுக்கான தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள பிபின் ராவத் ராணுவத்தினருக்கு உத்தரவு பிறப்பிக்க இயலாது. ஆனால் முப்படை தளபதிகளிடம் அரசின் முடிவுகளை தெரிவித்து அவற்றை செயல்படுத்துகிற ஆலோசகராக பணியாற்ற முடியும்.
அதேபோல் ஆயுத கொள்முதல், முப்படைகளின் கூட்டு நடவடிக்கை உள்ளிட்டவைகளையும் ஒருங்கிணைக்கும் பணியை முப்படைகளுக்குமான தலைமை தளபதி மேற்கொள்வார். மேலும், இந்திய ராணுவத்தில் முதல் முறையாக இந்த பதவி உருவாக்கப்பட்டுள்ளது.