புர்ஜ் கலிபாவில் இந்திய தேசியக் கொடியின் வண்ணத்தில் விளக்குகள்!
இந்திய தேசியக் கொடியின் வண்ணத்தில் துபாயில் உள்ள புர்ஜ் கலிபா உள்ளிட்ட பிரபல கட்டிடங்களில் விளக்குகள் ஒளிரவிடப்பட்டன. மேற்காசிய மற்றும் வளைகுடா நாடுகளில் தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் செல்கிறார்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் வரவேற்கும் வகையில் துபாயில் உள்ல புர்ஜ் கலிபா கட்டிடம் விளக்கு அலங்காரம் மூலம் இந்திய தேசியக் கொடியின் வண்ணத்தில் ஒளிரச் செய்யப்பட்டது.
துபாய் ஃப்ரேம் ((Dubai Frame)) எனப்படும் சட்டம் வடிவிலான கட்டிடமும், ADNOC எனப்படும் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்தின் தலைமையகமும் இந்திய தேசியக் கொடியின் வண்ணதில் ஒளிரவிடப்பட்டிருந்தன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.