உள்ளாட்சித் தேர்தல் – இதுவரை பதிவான வாக்குகள் எவ்வளவு ?

- இன்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.
- 2-ம் கட்ட தேர்தலில் 25.81% வாக்குகள் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் சென்னை உள்பட 10 மாவட்டங்களை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.காலியாக உள்ள 91,975 பதவி இடங்களுக்கு முதற்கட்ட தேர்தலில் 45 ஆயிரத்து 336 பதவி இடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது.
இன்று 46 ஆயிரத்து 639 பதவி இடங்களுக்கான 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.இந்நிலையில் 2-ம் கட்ட தேர்தலில் 11 மணி நிலவரப்படி 25.81% வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025