அமெரிக்காவின் ஹெச்1பி விசா குறித்த நடைமுறையில் பெரிய மாற்றங்கள் இருக்காது!
வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அமெரிக்காவின் ஹெச்1பி(H-1B) விசா குறித்த நடைமுறையில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் ஹெச்1பி(H-1B) விசா குறித்து காங்கிரஸ் உறுப்பினர் ராஜீவ் சுக்லா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் வசிக்கும் இந்திய பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், ஹெச்1பி(H-1B) விசா விவகாரத்தை இந்திய அரசு தொடர்ந்து கவனத்துடன் கண்காணித்து வருவதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
விசா நடைமுறையில் கொண்டு வரப்படும் மாற்றங்கள் இந்தியர்களை பாதிக்காமல் இருக்க, தொடர்ந்து பேசிவருவதாகவும் சுஷ்மா ஸ்வராஜ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.