Breaking: சின்னங்கள் மாறியதால் 8 மையங்களில் வாக்குப்பதிவு நிறுத்தம்.!

Default Image
  • தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு கீழையூர் 15-வது வார்டில் வேட்பாளர்களது சின்னங்கள் இடம் மாறியிருப்பதால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு உள்ளது.
  •  8 மையங்களில் அதிமுக , திமுக சின்னங்கள் மாறி இருந்ததால் , இதன் காரணமாக 1 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

தமிழகத்தில் புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் சென்னை உள்பட 10 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தலை  2 கட்டங்களாக நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனால் கடந்த 27-ம் தேதி முதற்கட்ட தேர்தலில் 45 ஆயிரத்து 336 பதவி இடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இன்று 2-ம் கட்ட தேர்தல் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைப்பெற்று வருகிறது.

இந்த இரண்டாம் கட்ட தேர்தலில் 1 கோடியே 28 லட்சம் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தகுதியானவர்களாக உள்ளனர். முதல் கட்ட தேர்தலை விட இரண்டாம் கட்ட தேர்தல் அதிக பதவிக்கு தேர்தல் நடைபெறுவதால் வாக்குப்பெட்டிகள், வாக்குச்சாவடி மையங்கள், போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று 46 ஆயிரத்து 639 பதவி இடங்களுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு கீழையூர் 15-வது வார்டில் வேட்பாளர்களது சின்னங்கள் இடம் மாறியிருப்பதால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு உள்ளது. ஒரத்தநாடு ஒன்றியம் 15-வது வார்டில்  உள்ள 8 மையங்களில் அதிமுக , திமுக சின்னங்கள் மாறி இருந்ததால் வேட்பாளர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதன் காரணமாக 1 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்