புதிய அரசு சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்- ஸ்டாலின்
- ஜார்கண்ட் மாநிலத்தின் முதமைச்சராக ஹேமந்த் சோரன் பதவியேற்றார்.
- புதிய அரசு சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11- வது முதலமைச்சராக பதவியேற்றார். ராஞ்சியில் நடைபெறும் விழாவில் ஹேமந்த் சோரனுக்கு அம்மாநில ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த பதவியேற்பு விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Honoured to be present at the swearing-in ceremony of @HemantSorenJMM.
Unity and coordination among secular parties essential to oppose #CAA & #NRC & #NPR fight back communal forces and protect social justice.
Wish the new government in Jharkhand a successful tenure. pic.twitter.com/gP8wKXInvu
— M.K.Stalin (@mkstalin) December 29, 2019
இந்நிலையில் இதன் பின்பு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், ஹேமந்த் சோரனின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். மதவாத சக்திகளுக்கு எதிராக போராடி, சமூக நீதியை நிலைநாட்ட வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு மதச்சார்பற்ற கட்சிகளுக்கு உள்ளது.
இந்தப் போராட்டத்துக்காக மதச்சார்பற்ற அனைத்துக் கட்சிகளுக்கு இடையே ஒற்றுமையும், ஒருங்கிணைப்பும் அவசியம். ஜார்க்கண்டில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.