தீபாவளி சீட்டு மூலம் பல லட்சம் மோசடி செய்துவிட்டு ஏமாற்றியவரின் கடைக்கே சாப்பிட சென்று வசமாக சிக்கிய நபர்!

Default Image
  • மதுரையில் செல்வராஜ் என்பவர் தீபாவளி சீட்டு நடத்துவதாக கூறி வாடிக்கையாளரிடம் பணம் வாங்கி பல லட்சரோபையுடன் தலைமறைவாகி விட்டார்.
  • அவரால் ஏமாற்றப்பட்ட நடராஜ் தள்ளுவண்டி கடைக்கு தானாக வந்து மாட்டிக் கொண்டார் செல்வராஜ். 

மதுரையில் பிரபல கேஸ் ஏஜென்சியில் முகவராக வேலை செய்து வந்துள்ளார் செல்வராஜ். இவர் கேஸ் ஏஜென்சி வரும் வாடிக்கையாளர்களிடம் தான் ஒரு தீபாவளி சீட்டு நடத்துவதாகவும், அதன்மூலம் நிறைய சலுகைகளை தருவதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பி பலர் அவரிடம் தீபாவளி சீட்டில் சேர்ந்துள்ளனர். இந்த தீபாவளி சீட்டில் பலர் சேர்ந்து உள்ளதாக தெரிகிறது. இதில் செல்வராஜின் உறவினர்கள் கூட பலர் சேர்ந்துள்ளனர்.

இதில் மதுரையில் ஒரு உணவு உணவகம் நடத்தி வரும் நட்ராஜ் என்பவரும் தனக்கு தெரிந்தவர்களிடம்  கூறி செல்வராஜிடம் தீபாவளி சீட்டு சேர வைத்துள்ளார். இதனிடையே அக்டோபர் மாதம் செல்வராஜ் தனது போனை சுவிட்ச் ஆப் செய்து பணத்துடன் தலைமறைவாகி விட்டார்.

இதனையடுத்து வாடிக்கையாளர்கள் போலீசில் புகார் செய்தனர். மேலும் நடராஜ் கூறிய கூறியதால் சேர்ந்த வாடிக்கையாளர்கள் நடராஜனை தொந்தரவு செய்ய ஆரம்பித்துள்ளனர். அதனால் அவர் வேறு வழியின்றி தனது உணவகத்தை விற்று அதன்மூலம் பணத்தை வாடிக்கையாளர்களுக்கு செட்டில் செய்துள்ளார்.

உணவு உணவகத்தை விற்றுவிட்டதால் ஒரு தள்ளுவண்டி கடை நடத்தி வந்துள்ளார். அந்த தள்ளுவண்டி கடையில் தலைமறைவான செல்வராஜ் இரவு உணவு வாங்குவதற்காக அண்மையில் வந்துள்ளார். செல்வராஜை அடையாளம் கண்ட நடராஜனின் மனைவி உடனே செல்வராஜை தனது கணவர் உதவியுடன் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தற்போது செல்வராஜை கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்