அப்ரிடி அணி அபார வெற்றி ! சேவாக் தலைமையிலான அணியை வீழ்த்தியது …

ஆல்ப்ஸ் மலையில் நடைபெற்ற ஐஸ் கிரிக்கெட் போட்டியில், வீரேந்திர சேவாக் தலைமையிலான அணியை சாஹித் அப்ரிடி அணி வீழ்த்தியது. முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் பங்கேற்ற இரண்டாவது டி20 போட்டி, சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையில் உள்ள உறைந்த ஏரியில் நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய சேவாக் தலைமையிலான டைமண்ட்ஸ் அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. சேவாக் 46 ரன்களும், சைமண்ட்ஸ் 67 ரன்களும் சேர்த்தனர்.

Image result for ice cricket 2018

பின்னர் விளையாடிய ராயல்ஸ் அணியில், ஜாக் காலிஸ் 37 பந்தில் 90 ரன்கள் குவித்தார். இதனால், அந்த அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment