இறைச்சிகாக 12 தெருநாய்கள் கடத்தல்.. காவல்துறையினரின் அதிரடி சோதனையில் சிக்கிய கடத்தல்காரர்கள்..
- வட கிழக்கு மாநிலமான நாகாலாந்தில் ஆட்டிறைச்சி மற்றும் மாட்டிறைச்சியை விட மிகவும் அதிகமாக விரும்பி உண்பது நாய் இறைச்சிதான்.
- உயிரினங்களில், ஊர்வன, பறப்பன என அனைத்தும் நாகலாந்து தலைநகர் கோஹிமாவில் கிடைக்கும். நாகாலாந்தின் பெரும்பாலான உணவகங்களில் நாய் இறைச்சி வகை உணவுகள் பெரிய மதிப்பு மிகுந்தவை.
இதன் காரணமாகவே அண்டை மாநிலங்களில் இருந்து தெருநாய்களை நாகாலாந்துக்கு கடத்தும் சம்பவங்கள் பெருமளவு அதிகரித்திருந்தன.அதிலும் குறிப்பாக அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து சட்டவிரோதமாக நாகாலாந்துக்கு நாய்களை கடத்தும் சம்பவம் தற்போது அதிகரித்திருந்தன.
இந்நிலையில் திரிபுரா மாநிலம் மற்றும் மிசோரம் மாநில எல்லையில் காவல்துறையினர் நடத்திய சோதனைகளில் 12 தெருநாய்களுடன் சென்ற கார் ஒன்று பிடிபட்டது.இது தொடர்பாக 2 பேரை கவல்துறையினர் கைது செய்தனர். அந்த காரை ஓட்டிய நபரிடம் காவலர் நடத்திய விசாரணையில், மிசோரமில் நாய் சந்தையில் விற்பதற்காக இவை கடத்தப்படுகின்றன என்றனர். இந்த சந்தை ஒரு தெருநாயின் விலை ரூ2,000 முதல் ரூ2500 வரை விற்கப்படுகிறது என்கிறார். இந்த சம்பவம் மற்ற மாநில மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.