திடீரென இறந்த கனடா பாப் பாடகி.! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்.!
- கனடாவில் கெல்லி பிரேசர் பாப் பாடகராகவும் , பாடலாசிரியராகவும் வலம் வந்தார்.
- கெல்லி இறந்தது தொடர்பான அவரது குடும்பத்தினர் எந்தவித தகவல்களை வெளியிடவில்லை.
கெல்லி பிரேசர் குடும்பத்தினர் வெளியிடவில்லை, அதிலும் அவர் முக்கியமாக எப்படி இறந்தார் என்ற தகவலும் கூறவில்லை.
கனடாவின் நுனாவுட் பிறந்தவர் கெல்லி பிரேசர். இவர் பாப் பாடகராகவும் , பாடலாசிரியராகவும் வலம் வந்தார். கெல்லி பிரேசர் கடந்த சில ஆண்டுகளாக மனிடோபா நகரில் வசித்து வந்தார்.
கெல்லி கடந்த 2004-ம் ஆண்டு இசுமா என்ற ஆல்பம் மூலம் இசைத்துறைக்கு அறிமுகமானார். அதன் பின்னர் வெளியிட்ட அனைத்து பாடல்களும் மிகப் பெரிய அளவில் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.
இந்நிலையில் கெல்லி கடந்த 24-ம் தேதி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து கெல்லி நண்பரும் , தயாரிப்பாளருமான தோர் சிமோன்சன் கூறுகையில் , கெல்லி பிரேசர் இறந்து விட்டார் என கூறினார்.கெல்லி பிரேசர் இறந்தது தொடர்பான அவரது குடும்பத்தினர் எந்தவித தகவல்களை வெளியிடவில்லை, அதிலும் அவர் முக்கியமாக எப்படி இறந்தார் என்ற தகவலும் கூறவில்லை.
கெல்லி பிரேசர் மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் பலர் தங்கள் இரங்கலை தெரிவித்தனர்.