தேர்வில் சரியாக எழுதாததால் கடிதம் எழுதிவிட்டு மாணவி செய்த காரியம்!கடிதத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த காவல்துறையினர்!
- வீட்டிற்கு வந்ததும் அறைக்குள் சென்று கதவை பூட்டிய மாணவி.வெகுநேரம் ஆகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர்.
- அறைக்குள்ளே சென்று பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த சம்பவம்.
சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர் சாமுவேல் .இவருடைய மகள் கீர்த்தனா ஆவார்.இவர் ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி முதலாம் ஆண்டு பயின்று வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரியில் பருவ தேர்வு நடைபெற்றுள்ளது.அப்போது கீர்த்தனா தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்தவர் தனது அறைக்கு பூட்டிகொண்டுள்ளார்.
பின்னர் வெகுநேரமாகியும் திரும்ப வெளியே வராதலால் அதிர்ச்சி யடைந்த பெற்றோர் அறைக்குள் சென்று பார்த்துள்ளனர்.அப்போது கீர்த்தனா தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பின்னர் மகளின் மரணம் தாங்கமுடியாமல் கதறி அழுத பெற்றோரின் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளன.தகவலின் அடிப்பையில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்துள்ளனர்.
பின்னர் சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.பின்னர் கீர்த்தனாவின் அறையை சோதனை செய்த காவல்துறையினருக்கு அவர் கைப்பட எழுதிய ஒரு கடிதம் கிடைத்துள்ளது.
அந்த கடிதத்தை படித்த காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அதில் என் பெற்றோர் என்னை மிகவும் சிரமப்பட்டு படிக்க வைக்கிறார்கள்.ஆனால் கல்லூரியில் நடந்த பருவத்தேர்வில் நான் சரியாக எழுதவில்லை.
இதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்.என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என எழுதியிருந்துள்ளது.இந்த சம்பவம் காரணமாக காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்துவருகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.