நம் நாட்டில் கோலம் போடுவது கூட தேசவிரோதம் தான்! டிவிட்டரில் விமர்சித்த எம்பி கனிமொழி!

Default Image
  • குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் பெண்கள் கோலம் போட்டு போராட்டம் செய்தனர்.
  • இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 7 பெண்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டம் தமிழகத்திலும் ஆங்காங்கே தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சென்னையில் சில பெண்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், குடிமக்கள் பதிவேடு சட்டத்திற்கு எதிராகவும் தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் சாலைகளில் கோலம் போட்டு அந்த கோலத்தில் NO CAA, NO NRC என்று அவர்கள் எழுதி தங்களது எதிர்ப்பை தெரிவித்து போராட்டம் செய்தனர்.

இதனை அடுத்து கோலம் போட்டு போராட்டத்தில் ஈடுபட்ட  7 பெண்களை போலீசார் கைது செய்தனர். பின்னர், சற்று நேரத்தில் அவர்களை விடுவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து திமுக எம்.பி கனிமொழி, தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள பதிவில், நம் நாட்டில் வாசல் கூட்டுவது, கோலம் போடுவது போன்றவை தேசவிரோதம் என்பது தற்போது தெளிவாகியுள்ளது. பெற்ற சுதந்திரத்தை பேணிக் காத்து, அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் உறுதி செய்து தங்கள் எஜமானின் மனம் குளிர செயல்பட்டு வரும் எடப்பாடி அரசுக்கு பாராட்டுக்கள்.’ எனவும் பதிவிட்டுள்ளார்.

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்