தனது 20 வருட நண்பரை காதல் திருமணம் செய்த 65 வயது மூதாட்டி.!

- கேரளா திருச்சூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி அம்மாள் 21 ஆண்டுகளுக்கு முன்னர் தனது கணவனை இழந்தார். கணவர் மறைந்த பிறகு லட்சுமி அம்மாளை உதவியாளராக வேலை செய்து கோச்சானியன் தான் தற்போது வரை கவனித்து வருகிறார்.
- 20 ஆண்டு கால நண்பர் கோச்சானியனை திருமணம் செய்ய லட்சுமி அம்மா விருப்பம் தெரிவித்துள்ளார்.
கேரளா திருச்சூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி அம்மாள் 21 ஆண்டுகளுக்கு முன்னர் தனது கணவனை இழந்தார். பின்னர் லட்சுமி அம்மாள் கணவரின் உதவியாளராக வேலை செய்து வந்த கோச்சானியன். கணவர் மறைந்த பிறகு லட்சுமி அம்மாளை கோச்சானியன் தான் கவனித்து வருகிறார். லட்சுமி அம்மாளின் கணவர் மரணப்படுக்கையில் இருந்த போது, மனைவியை கவனித்துக்கொள்ளும்படி கோச்சனியனிடம் கூறிவிட்டு இறந்துவிட்டார். அதன்பேரில், கடந்த 21 ஆண்டுகளாக லட்சுமி அம்மாளுடன் இருந்து அவரை கவனித்து வருகிறார் கோச்சானியன்.
இந்நிலையில், இவர்களின் 20 ஆண்டு கால நட்பு தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது. லட்சுமி அம்மாள், தனது 20 ஆண்டு கால நண்பர் கோச்சானியனை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். அப்போது, அரசு முதியோர் இல்லம் இவர்களின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தது. அதை தொடர்ந்து, இன்று அரசு முதியோர் இல்ல கண்காணிப்பாளர் வி.ஜி.ஜெயகுமார் தலைமையில் இவர்களின் திருமணம் நடைபெற்றது. இந்த வித்தியாசமான என்ற திருமணத்தில் பலர் கலந்து கொண்டு வாழ்த்து கூறி வந்தனர். இந்த புதுமணத் தம்பதிகளின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025
சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து! வெளியேறிய பாக், வங்.,அணிகள்.!
February 25, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025