கரப்பான்பூச்சிக்கு பிரசவமா.! செய்து காட்டிய மருத்துவர்.! வியக்க வைக்கும் வீடியோ.!
- ரஷ்யாவில் ஒருவர் வளர்ப்பு கரப்பான்பூச்சிக்கு சிரமப்பட்டு வருவதை உணர்ந்த அவர் உடனடியாக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
- கால்நடை மருத்துவர் ஒருவர் கரப்பான்பூச்சி ஒன்றுக்கு அறுவைச் சிகிச்சை செய்து பிரசவம் பார்த்த வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவர் கரப்பான்பூச்சி ஒன்றை வளர்ப்புப் பூச்சியாக வளர்த்து வந்தார். சமீபத்தில் தனது வளர்ப்பு கரப்பான்பூச்சி சிரமப்பட்டு வருவதை உணர்ந்த அவர் உடனடியாக கால்நடை மருத்துவமனைக்கு தனது கரப்பான்பூச்சியை அழைத்துச் சென்றார். கரப்பான் பூச்சியை சோதித்த மருத்துவர் அந்தப் பூச்சி கர்ப்பமாக இருப்பதையும், அதற்கு பிரசவம் நேரம் நெருங்கியுள்ளதையும் அறிந்துள்ளார்.
இந்நிலையில், இயற்கையாக பிரசவத்தில் அந்தக் கரப்பான்பூச்சி சிக்கலைச் சந்தித்துள்ளது. இதனால் உடனடியாக மூன்று விதமான மயக்க மருந்துகள் தரப்பட்டன. உள்ளே எடுத்துக் கொள்ளும் வகையில் ஒரு மயக்க மருந்து, சாதாரண அனஸ்தீஷியா, மற்றும் வாயு அனஸ்தீஷியா ஆகியன அந்தக் கரப்பான்பூச்சிக்குக் கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் கரப்பானின் உடலிலிருந்து முட்டை பை ஆப்பரேஷன் மூலம் எடுக்கப்பட்டது. அதற்கான வீடியோவை டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
Russian vets successfully perform nano-surgery on cockroach that had pregnancy complications
MORE: https://t.co/LcWyowHeQY pic.twitter.com/zclHWEcf5Q
— RT (@RT_com) December 27, 2019
Жить будет: в красноярской клинике сделали операцию таракану-архимандриту pic.twitter.com/lPxy8gkQqV
— ВЕСТИ (@vesti_news) December 23, 2019
பின்னர் சிசேரியன் வெற்றியால் கரப்பான் உயிர் பிழைத்தது. தென் அமெரிக்க காடுகளில் காணப்படும் அர்சிமந்திரத்தா கரப்பான் என்னும் அரிய வகை கரப்பான் இனமான இந்தப் பூச்சி தனது வாழ்நாளில் 8 செ.மீ நீளத்துக்கு வளருமாம். கரப்பானின் உரிமையாளர் தகுந்த நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு வந்திருக்காவிட்டால் கரப்பானுக்கு அது தொற்று வியாதியை ஏற்படுத்தி அதன் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் கூறினார்.